/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் நிறுவன ஊழியர் மாயம்: போலீசில் புகார்
/
தனியார் நிறுவன ஊழியர் மாயம்: போலீசில் புகார்
ADDED : ஆக 27, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கிருஷ்ணகுமார், 22; இவர் புதுச்சேரி, நெட்டபாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12:30 மணியளவில் பல்லரிப்பாளையம் கிராமத்திலிருந்து திருக்கோவிலுாருக்கு பணம் எடுக்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இவரது தந்தை அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.