/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆழ்துளை கிணறு அமைப்பதில் பிரச்னை; நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.,யிடம் புகார்

ADDED : மார் 12, 2025 11:44 PM

விழுப்புரம்; உளுந்துார்பேட்டை அருகே மிரட்டல் விடுத்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே பு.கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில்,எங்கள் கிராம ஏரிக்கரை அருகேவுள்ள சாக்கடை நிறைந்த பகுதியில் கடந்த 10ம் தேதி மாலை ஒருவர் கிராம மக்கள் குடிப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டார்.
அப்போது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த குமார் , ஏன் இங்கு ஆழ்துளை கிணறு அமைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த நபர் மற்றும் அவருடன் இருந்த பெண் சேர்ந்து குமாரை தாக்கினர். தட்டிக்கேட்ட கார்த்திக் மற்றும் கிராம மக்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த குமார், கார்த்திக் இருவம் உளுந்துார்பேட்டை அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றி உளுந்தூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றபோது எங்களை வழிமறித்து தடுத்து மிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தனர்.