/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம்
/
மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம்
ADDED : செப் 15, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மின் கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து நாசமானது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 70; கூலித்தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.