/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை
/
ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை
ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை
ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை
ADDED : மே 02, 2024 06:52 AM

விழுப்புரம், :தமிழ்நாடு ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்க விழுப்புரம் மாவட்ட கிளை சார்பில் மே தின பேரணி மற்றும் கூட்டம் நடந்தது.
கௌரவ தலைவர் மோகன், மாவட்ட தலைவர் மணி, செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜசேகர், துணை தலைவர்கள் செல்வம், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் ஆனந்தன், பொது செயலாளர் ரங்கநாதன், மாநில பொருளாளர் பக்தவச்சலம் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
தொழிலாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு, ஒலி, ஒளி நலச்சங்கத்தினருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.