/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்ஜினியரிங் மாணவர்களின் திறன் அறிந்து கல்வி நிறுவனங்களே வழிகாட்டுகிறது சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம்
/
இன்ஜினியரிங் மாணவர்களின் திறன் அறிந்து கல்வி நிறுவனங்களே வழிகாட்டுகிறது சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம்
இன்ஜினியரிங் மாணவர்களின் திறன் அறிந்து கல்வி நிறுவனங்களே வழிகாட்டுகிறது சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம்
இன்ஜினியரிங் மாணவர்களின் திறன் அறிந்து கல்வி நிறுவனங்களே வழிகாட்டுகிறது சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம்
ADDED : ஜூலை 01, 2024 06:20 AM

விழுப்புரம், : 'ஏராளமான கல்வி நிறுவனங்கள், இன்ஜினியரிங் மாணவர்களின் திறனுக்கேற்ப வாய்ப்புகளை வழங்கி, உயர்கல்விக்கும் வழிகாட்டுகிறது' என சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நடந்த 'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், திறன் வளர்ப்பு குறித்த அவர் பேசியதாவது:
இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பணம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற அவசியம் இல்லை. ஏராளமான கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் திறனுக்கு ஏற்ப, அவர்களாகவே வாய்ப்புகளை வழங்கி, உயர்கல்விக்கும் வழிகாட்டுகின்றனர். அதற்கு, மாணவர்கள் நல்ல கல்லுாரியை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
முதல் ஆண்டிலேயே தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். தற்போது, ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் போன்ற அட்வான்ஸ் படிப்புகள் வந்துவிட்டதால், அதற்கேற்றாற் போல், மாணவர்களும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக சுயமாக சிந்திக்கும் திறன் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். ஒரு ப்ராஜெக்டை மாணவரே தயார் செய்யவும், ஒரு தயாரிப்புக்கான பிரச்னைக்கும் தீர்வு காண்பவராக இருக்க வேண்டும். புதிய சாப்ட்வேர்களை தயாரிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
இப்போது, பேங்கிங் போன்ற பல துறைகளில் புதிய சாப்ட்வேர்களுக்கான தேவையுள்ளது. அதனை பூர்த்தி செய்ய வேண்டும். முன்பு யு.பி.எஸ். போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இங்குள்ள சிறிய நிறுவனங்கள் மூலம் வேலையை பிரித்து வழங்கி வந்தது. இப்போது, யு.பி.எஸ்., போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளது.
தற்போது சென்னையில் அந்நிறுவனம் 2,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளனர். ஏற்கனவே 500 பேரை வேலைக்கு சேர்த்துள்ளனர். இது போன்ற ஜி.சி.சி., நிறுவனங்கள் 1,750 உள்ளன. இந்நிறுவனங்கள் 8 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் 250 உள்ளது.
இது மட்டுமின்றி எலக்ட்ரானிக் சிப்கள், செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகளவில் வந்து, வேலை வாய்ப்புகளும் கூடியுள்ளது.
இது போன்ற நிறுவனங்களில் சேர்வதற்கு கணிதம் சார்ந்த அறிவும் திறனும் இருக்க வேண்டும். 4 ஆண்டு இன்ஜினியரிங் முடித்தால் போதாது. சி. சி.பிளஸ் பிளஸ், கம்ப்யூட்டர் கோடிங் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் எங்கள் கல்லூரியில் பயிற்சி அளிக்கிறோம். 25 சதவீதம் பேரை உயர் படிப்புக்கு தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். 7 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் நோக்கில் தயார்படுத்தி பயிற்சியளித்து வருகிறோம். 5 மொழிகளை சொல்லிக் கொடுக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் 95.2 சதவீதம் பிளேஸ்மெண்ட் வழங்கி இருக்கிறோம். கேட் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கின்றோம். 50 பேருக்கு நாங்கள் பயிற்சி அளித்ததில், 28 பேர் தேர்வாகி சென்றுள்ளனர்.
இன்ஜினியரிங் படிக்கும் அனைவருக்குமே வேலை கிடைக்கும். அதில் அதிகம் சம்பாதிக்கும் நிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அனுபவம் உள்ள இன்ஜினியர்களையே நிறுவனங்கள் கேட்கிறது. அதனால், படிக்கும் போது திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்,
இவ்வாறு ஸ்ரீராம் பேசினார்.