/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெல்டிங் தொழிலுக்கான கூடுதல் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் மாநில மாநாட்டில் வலியுறுத்தல்

ADDED : மே 02, 2024 06:54 AM

விழுப்புரம் : தமிழகத்தில் வெல்டிங் தொழிலுக்கான கூடுதல் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு வெல்டிங் கடை முன்னேற்ற சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு வெல்டிங் கடை உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 3வது மாநில மாநாடு விழுப்புரத்தில், ஆனந்தா திருமண மண்டபத்தில் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாநில பொதுகுழு உறுப்பினர் வீரமணி, மாவட்ட துணை தலைவர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் முனுசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சூரியதீபன், நகர தலைவர் ஜான், நகர செயலாளர் ஜீவா வரவேற்றனர். மாநில தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் பாலாஜி, மாநில பொருளாளர் மோகன் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டு தீர்மானம்: தமிழகத்தில் வெல்டிங் தொழிலுக்கு 20 சதவீதம் கூடுதல் கட்டணத்தை குறைக்க வேண்டும். விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். தங்கம் போல் உயரும் இரும்பு விலை உயர்வினை கட்டுபடுத்த வேண்டும். அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணை தலைவர் அருள் நன்றி கூறினார்.