/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
ADDED : ஏப் 10, 2024 01:57 AM

மயிலம்: மயிலம் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கட்சிகளின் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஆரணி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களின் கட்சி மற்றும் சுயேச்சை சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
விழுப்புரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தன் தலைமையில் அதிகாரிகள் பணியை மேற்கொண்டனர்.
திண்டிவனம் தாசில்தார் சிவா, மயிலம் வருவாய் ஆய்வாளர் கீதா, மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
செஞ்சி
செஞ்சியில், ஆரணி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சட்டசபை தொகுதியில் 304 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வளர்மதி மேற்பார்வையில் மண்டல அலுவலர்கள், வருவாய்த் துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர். தாசில்தார் ஏழுமலை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் செல்வகுமார், துரைசெல்வன், தேர்தல் துணை தாசில்தார் மணிகண்டன், உதவியாளர் சரவணன் பங்கேற்றனர்.

