/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் புனரமைப்பு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு
/
கோவில் புனரமைப்பு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 21, 2024 11:56 PM

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் புனரமைப்பு மற்றும் , சிமென்ட் சாலை பணிகளை அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அவலுார்பேட்டையில் ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முத்து விநாயகர் கோவில் புனரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின்அர்ஷத் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் செல்வம் வரவேற்றார்.
பூமி பூஜையில் பங்கேற்று, அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டி கோவில் புனரமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து கடைவீதியில் மங்கலம் செல்லும் வழியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.
இதில் ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.