/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சத்திரம் அருகே மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
/
புதுச்சத்திரம் அருகே மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
புதுச்சத்திரம் அருகே மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
புதுச்சத்திரம் அருகே மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
ADDED : பிப் 25, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே மூதாட்டியிடம் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த ஆதிநாராயணபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பேபி, 85.
இவர், நேற்று தனது மளிகை கடையில் இருந்தபோது, பொருள் வாங்குவதுபோல் வந்த மர்ம நபர், திடீரென பேபி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். அதன் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து மூதாட்டியின் மகன் ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.