/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
/
திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
ADDED : ஏப் 21, 2024 05:47 AM

செஞ்சி: திருவம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
செஞ்சி பகுதியில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான திருவம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
அன்று சாகை வார்தலும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 19ம் தேதி தீமிதி விழாவும், முத்து பல்லக்கு உற்சவமும் நடந்தது.
நேற்று 20ம் தேதி தேர்திருவிழா நடந்தது. அதனையொட்டி, மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பரம்பரை தர்மகர்த்தா ஏழுமலை, அமைச்சர் மஸ்தான் உட்பட ஏரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.