/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அருகே தனியார் கம்பெனியில் காப்பர் கம்பி திருடிய இரண்டு பேர் கைது
/
வானுார் அருகே தனியார் கம்பெனியில் காப்பர் கம்பி திருடிய இரண்டு பேர் கைது
வானுார் அருகே தனியார் கம்பெனியில் காப்பர் கம்பி திருடிய இரண்டு பேர் கைது
வானுார் அருகே தனியார் கம்பெனியில் காப்பர் கம்பி திருடிய இரண்டு பேர் கைது
ADDED : செப் 07, 2024 05:31 AM

வானூர் : வானூர் அருகே தனியார் கம்பெனிக்குள் புகுந்து காப்பர் ஒயர்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில் ஒழிந்தியாம்பட்டு சந்திப்பில் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி நிர்வாக அதிகாரிகள், கம்பெனிக்குள் உற்பத்தி பிரிவில் உபயோகிக்கும் காப்பர் கம்பி சுருள்களை சரி பார்த்தனர். அப்போது 341 கிலோ காப்பர் கம்பிகள் திருடு போனது தெரிய வந்தது.
இதையடுத்து நிர்வாக அதிகாரிகள், கம்பெனிக்குள் இருக்கும் சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, 22ம் தேதி மட்டுமின்றி, கடந்த மாதம் 12ம் தேதி நள்ளிரவும், கம்பெனியின் பின்பக்கம் உள்ள சுற்று சுவர் வழியாக 2 மர்ம ஆசாமிகள் நுழைந்து திருடிய சம்பவமும் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து அந்த கம்பெனி மனித வள மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வானூர் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கண்ணபிரான், 39; அழகேசன் மகன் அற்புதராஜ், 32; ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் காப்பர் கம்பிகளை திருடி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அதன் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ. 1.50 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.