/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.சி., கொடியுடன் வரக்கூடாது தி.மு.க., எம்.எல்.ஏ.,வை முற்றுகை
/
வி.சி., கொடியுடன் வரக்கூடாது தி.மு.க., எம்.எல்.ஏ.,வை முற்றுகை
வி.சி., கொடியுடன் வரக்கூடாது தி.மு.க., எம்.எல்.ஏ.,வை முற்றுகை
வி.சி., கொடியுடன் வரக்கூடாது தி.மு.க., எம்.எல்.ஏ.,வை முற்றுகை
ADDED : ஏப் 11, 2024 03:42 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வி.சி., வேட்பாளர் பிரசார வேனில் வி.சி., கொடியை அகற்றக் கோரி இளைஞர்கள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட ஆணைவாரி, மாதம்பட்டு, சரவணம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிகண்ணன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இரவு 9:00 மணியளவில் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.
பெரியசெவலை கிராமத்திற்குள் ஓட்டு கேட்க வி.சி., பிரசார வேனில் சென்றார். அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வேனை மறித்து வி.சி., கொடியை அகற்றிவிட்டு ஊருக்குள் செல்லுமாறு கூறி, டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் இளைஞர்களை சமாதானம் செய்து, பிரசார வேனை ஊருக்குள் போக செய்தனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.