/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் பூத் அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
/
மாவட்டத்தில் பூத் அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
மாவட்டத்தில் பூத் அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
மாவட்டத்தில் பூத் அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
ADDED : ஆக 23, 2024 06:58 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பூத் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு, வீடாக சென்று வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணி, பூத்களை திருத்தியமைத்தல், மறுசீரமைத்தல், வாக்காளர் பட்டியலில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உட்பட பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் முதல் வரும் அக்., 18 ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதையொட்டி, வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் வெளியிடப்படவுள்ளது. தொடர்ந்து, ஏற்புரை, மறுப்புரைகள் விண்ணப்பிக்க காலக்கெடு வரும் 29 ம் தேதி முதல் நவ., 28 ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால கட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தவுள்ள நிலையில் இதற்கான தேதி பின் அறிவிக்கப்படவுள்ளது. ஏற்புரை, மறுப்புரை மீதான தீர்வு வழங்கும் காலக்கெடு வரும் டிச., 24ம் தேதியாகும். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 2025ம் ஆண்டு ஜன., 6 ம் தேதி வெளியிடப்படுகிறது.
புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், பணியின் போது கோரிக்கை, மறுப்புரை அளிக்க அனுமதிக்கப்பட்ட வரும் அக்., 29 ம் தேதி முதல் நவ., 28 ம் தேதி வரையுள்ள காலத்தில் பெயர் சேர்த்தல் உட்பட தேவையான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பணி நாட்களில் பூத் அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நேரில் வழங்கலாம். இல்லையேல் இணையவழி மூலமாக www.voters.eci.gov.in என்ற முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம் நடக்கும் நாட்களில், பூத்கள் உள்ள இடங்களில் ஓட்டுச்சாவடி மைய அலுவலராக செயல்படும் தலைமை ஆசிரியரிடம் அளிக்கலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1950 கட்டணமில்லா தொலைபேசி மூலம் அலுவலக பணி நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.