sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை பணிகள் 'விறுவிறு'; சீர்காழி காரைமேடு வரை ஜனவரியில் முடிக்க திட்டம்

/

விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை பணிகள் 'விறுவிறு'; சீர்காழி காரைமேடு வரை ஜனவரியில் முடிக்க திட்டம்

விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை பணிகள் 'விறுவிறு'; சீர்காழி காரைமேடு வரை ஜனவரியில் முடிக்க திட்டம்

விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை பணிகள் 'விறுவிறு'; சீர்காழி காரைமேடு வரை ஜனவரியில் முடிக்க திட்டம்

2


ADDED : ஆக 27, 2024 05:32 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:32 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணியில், விழுப்புரம் - மயிலாடுதுறை மாவட்டம் காரைமேடு இடையிலான 123.8 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் 85 சதவீதம்நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய பணிகளை, வரும் ஜனவரிக்குள் முடிக்க 'நகாய்' திட்டமிட்டுள்ளது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 6,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் துவங்கும் இச்சாலை, புதுச்சேரி மற்றும் கடலுார், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 134 கிராமங்கள் வழியாக அமைகிறது.

சாலைப் பணிகளை எளிதாக செய்து முடிக்க ஏதுவாக, நான்கு பிரிவுகளாக பிரித்து மேற்கொள்ள மத்திய அரசின் 'நகாய்' எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, விழுப்புரம் - புதுச்சேரி இடையே 29 கி.மீ., துாரம்; புதுச்சேரி - கடலுார் பூண்டியாங்குப்பம் இடையே 38 கி.மீ., என மொத்தம் 67 கி.மீ., துாரத்திற்கான சாலைப்பணி போபாலை சேர்ந்த திலீப் கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பூண்டியாங்குப்பம் - சீர்காழி அருகே மயிலாடுதுறை மாவட்டம் காரைமேடு வரையிலான 56.8 கி.மீ., துார சாலைப்பணி டில்லியை சேர்ந்த ஓரியண்டல் ஸ்டிரக்ஸர் நிறுவனத்திடமும், காரைமேடு - நாகப்பட்டினம் வரையில், 56 கி.மீ., துாரத்திற்கான பணி குஜராத்தை சேர்ந்த வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2021ல் பணி துவங்கியது. தற்பொழுது விழுப்புரம் - புதுச்சேரி அரியூர் வழியாக கடலுார், பி.முட்லுார், சிதம்பரம், காரைமேடு வரை 123.8 கி. மீ., துாரத்திற்கு 7 ரயில்வே மேம்பாலம் உட்பட சிறிய பாலங்கள், குறும்பாலங்கள் அமைக்கப்பட்டு சாலையை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கெங்கராம்பாளையத்தில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த மின்சார டவர் அகற்றும் பணி, 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் விரைந்து அகற்றப்பட்டு, தற்போது புதிய டவர் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேம்பாலம் இணைப்பு சாலை பணி நடந்து வருகிறது.

கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில், சாலையின் தென்புறம் ரயில்வே மேம்பாலத்திற்காக 'பவுஸ்டிங் கர்டர்' அமைத்து முதலில் தென்புறத்தில் சாலை போக்குவரத்திற்கு திறந்து விடப்பட உள்ளது.

இங்கு மேம்பால பணியை முடிந்து இணைப்பு சாலை பணிகள் நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் ஒரு வழியில் போக்குவரத்தை திறந்து விட திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரி,பாகூரில் மின் டவர்கள் அகற்றாமல் பணி கிடப்பில் உள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன், புதிய டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறும் முயற்சியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டுள்ளார்.

கடலுார் - விருத்தாசலம் ரோடு, அன்னவல்லியில் ரயில்வே மேம்பால பணி முடிந்து சாலை இணைப்பு பணி நடக்கிறது. இப்பகுதியில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பணி முடிவடைந்து போக்குவரத்து துவங்கவுள்ளது.

சங்கொலிக்குப்பம் பகுதியில் மேம்பால சாலை இணைப்பு பணிக்கு மண் தட்டுப்பாடு காரணமாக, நெய்வேலியில் இருந்து நிலக்கரி சாம்பல் (பாண்டு) வரவழைத்து கொட்டி நிரப்பி இணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பூண்டியாங்குப்பம் அருகே ஆலப்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் பணியில், சாலையின் கிழக்கு பகுதியில் 'பவுஸ்டிங் கர்டர்' அமைத்து போக்குவரத்து துவங்கியுள்ளது. மேற்குபுற சாலையின் மேம்பாலத்தில் 'பவுஸ்டிங் கர்டர்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது வரை, இத்திட்டத்தில் விழுப்புரம் - மயிலாடுதுறை மாவட்டம் காரைமேடு இடையே 123.8 கி.மீ., வரை 4 வழிச்சாலை பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

மீதமுள்ள 15 சதவீத பணிகளை 'நகாய்' கெடு விதித்துள்ள 2025 ஜனவரி இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு பணிகள்துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி 'நகாய்' திட்ட அமலாக்க பிரிவு இயக்குனர் சக்திவேல், மேலாளர் ஜெகதீஷ் ஆகியோர் பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கி வருகிறனர்.






      Dinamalar
      Follow us