/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பஞ்சராகிபோன பஸ் நிலைய சாலைகள் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களா?

ADDED : ஜூன் 28, 2024 11:14 PM

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்திலுள்ள சாலைகள் முற்றிலும் வாகனங்கள் செல்வதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர்.
திண்டிவனத்தில், நகராட்சி இடத்தில் இந்திராகாந்தி பஸ் நிலையமும் மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தொலைதுாரங்கள் செல்லும் பஸ்கள் வந்து செல்லும் பஸ் நிலையமாக செயல்பட்டு வருகின்றது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நகராட்சி பஸ் நிலையத்தில் மயிலம், செஞ்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வேலுார், வந்தவாசி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிக அளவில் தினந்தோறும் வந்து செல்கின்றது.
பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், குண்டும் குழியுமாக இருந்த இடங்களில் பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பஸ் நிலையத்திலுள்ள சாலைகள் வாகனங்கள செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது.
சாலைகள் இல்லாத அளவிற்கு முற்றிலும் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கின்றது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர்.
தற்போதுள்ள நிலையில், திண்டிவனத்தில் நிரந்தர பஸ் நிலையமாக செயல்பட்டு வரும் நகராட்சி பஸ் நிலையத்திற்கு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பித்து தார் சாலை போடுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, நகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.