/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை
/
வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை
ADDED : செப் 10, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் காலனியைச் சேர்ந்தவர் சேகர், 60 ;கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த அவர், வீட்டின் எதிரே உள்ள வேப்ப மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.