/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய 10 கோரிக்கைகள்... என்னாச்சு: கலெக்டரை சந்திக்கவும் சட்டசபையில் பேசவும் எம்.எல்.ஏ., முடிவு
/
திண்டிவனம் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய 10 கோரிக்கைகள்... என்னாச்சு: கலெக்டரை சந்திக்கவும் சட்டசபையில் பேசவும் எம்.எல்.ஏ., முடிவு
திண்டிவனம் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய 10 கோரிக்கைகள்... என்னாச்சு: கலெக்டரை சந்திக்கவும் சட்டசபையில் பேசவும் எம்.எல்.ஏ., முடிவு
திண்டிவனம் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய 10 கோரிக்கைகள்... என்னாச்சு: கலெக்டரை சந்திக்கவும் சட்டசபையில் பேசவும் எம்.எல்.ஏ., முடிவு
ADDED : ஆக 12, 2025 02:47 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின், 234 சட்டசபை தொகுதிகளிலும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான முன்னுரிமை கோரிக்கைகளின் பட்டியலை, அனுப்புமாறு ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த பட்டியல் அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், கலெக்டரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கட்சி வித்தியாசமின்றி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திண்டிவனம் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன், கடந்த ஆண்டு, ஜனவரி 24ம் தேதி, அப்போதைய கலெக்டர் பழனியிடம் , தொகுதியில் நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மனுவாக நேரில் வழங்கினார்.
அதன்படி, திண்டிவனம் தொகுதியில் வழங்கப்பட்ட 10 கோரிக்கைகளில், மரக்காணம் ஒன்றியம், அன்னம்புத்துார் - ஓமந்துாரை இணைக்கும் நரசிம்மர் ஓடையின் குறுக்கே 6 கோடி ரூபாய் செலவில் ஆற்றுப்பாலம் கட்டித்தரப்பட்டது.
ரோஷணையில்பல்நோக்கு சமுதாய கூடம் மற்றும் கிடங்கல் (2) பல்நோக்கு சமுதாய கூடம் கட்டப்பட்டது.
திண்டிவனம், வகாப் நகர்,ஏ.ஜி., சர்ச் எதிரில் திண்டிவனம் - புதுச்சேரி ரோடு, ஊடு உறவு பாலம்1.24 கோடி ரூபாய் செலவில் கட்டியது என 4 கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்பட்டது.
திண்டிவனம் இந்திராகாந்தி பஸ் நிலையம் அருகே சேதமடைந்த தரைப்பாலம், 1.44 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பத்து கோரிக்கைகளில் மீதமுள்ள 5 கோரிக்கைகளான, மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு முதல்-பூமீஸ்வரர் கோவில் உள்ள புலியங்கால் வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
மரக்காணம் ஒன்றியம், ராயநல்லுார் - கந்தாடு வரையில் உள்ள ஓங்கூர் பகுதியில் வெள்ளகாலங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதையொட்டி, அந்தப்பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். மரக்காணம் காலனி பகுதியில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட வேண்டும்.
திண்டிவனம், இந்திரா நகர், வகாப் நகர் பகுதியில் உயரழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால், 500 வீடுகளுக்கு ஆபத்து உள்ளதால் அந்தப்பகுதியில் பூமிக்கடியில் மின்சாரம் கொண்டு செல்லும் புதைவழித் தடத்தை அமைக்க வேண்டும்.
ஒலக்கூரில் மிகவும் பிற்படுத்தப்பட்டடோர் வசிக்கும் இடத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும். மரக்காணம் காலனி பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இதுகுறித்து, தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன் கூறுகையில், 'தமிழக முதல்வர் கூறியபடி, கடந்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி, விழுப்புரம் கலெக்டரை நேரில் சந்தித்து, திண்டிவனம் சட்டசபை தொகுதியில் 10 முக்கியமான கோரிக்கைகைள் குறித்து மனு அளித்தேன்.
இதில் குறைந்த நிதி ஒதுக்கீட்டில் உள்ள 5 கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிக நிதி ஒதுக்கீடு உடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
ஆட்சி முடிவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால், கோரிக்கைகள் நிறைவேறுமா என்று தெரியவில்லை. கோரிக்கை குறித்து கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட உள்ளேன். சட்டசபையிலும் கோரிக்கை குறித்து பேச உள்ளேன்' என்றார்.

