/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை
/
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : நவ 12, 2024 08:20 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ரஞ்சித்குமார், 29; இவர், 25 வயது பெண்ணை கடந்த 2018ம் ஆண்டு காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அந்த பெண் நெருங்கிப் பழகினார்.
இந்நிலையில், ரஞ்சித்குமாருக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர்.
இதையறிந்து கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி அந்த பெண், ரஞ்சித்குமாரை சந்தித்து திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது அவர் மறுத்துள்ளார்.
அப்பெண், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலியல் வன்புணர்ச்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று, ரஞ்சித்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.