/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.10.80 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்
/
ரூ.10.80 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்
ADDED : மார் 05, 2024 11:47 PM

மரக்காணம் : மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகாம் முன்னிலை வகித்தார்.
மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, சேர்மன் தயாளன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் புஷ்பவள்ளி, தாசில்தார்கள் சிவா, முகமது அலி, ஒன்றிய கவுன்சிலர் துர்காதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
நிழ்ச்சியில், 778 பயனாளிகளுக்கு 10.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் நலதிட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

