/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோ கவிழ்ந்து விபத்து 11 பேர் காயம்
/
ஆட்டோ கவிழ்ந்து விபத்து 11 பேர் காயம்
ADDED : செப் 05, 2025 07:58 AM
விழுப்புரம்; விழுப்புரம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் பிரகாஷ், 35; ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் அய்யூர் அகரத்தை சேர்ந்த லட்சுமி, 60; சிந்தாமணியை சேர்ந்த விஜய், 26; பழனிசாமி மனைவி பானுமதி, 42; உட்பட 11 பேர் நேற்று சென்றனர்.
அய்யூர் அகரம் ஏரிக்கரை அருகே காலை 9:15 மணிக்கு சென்றபோது, ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த லட்சுமி உள்ளிட்ட 11 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக, விழுப்புரம் தாலுகா போலீசார், பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.