/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருத்துவமனையில் நரம்பியல் டாக்டரை நியமிக்க கோரிக்கை
/
மருத்துவமனையில் நரம்பியல் டாக்டரை நியமிக்க கோரிக்கை
மருத்துவமனையில் நரம்பியல் டாக்டரை நியமிக்க கோரிக்கை
மருத்துவமனையில் நரம்பியல் டாக்டரை நியமிக்க கோரிக்கை
ADDED : செப் 05, 2025 07:57 AM

விழுப்புரம்; அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரியில் நரம்பியல் அறுவை சிகிச்சை டா க்டரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன், டாக்டர் சந்தோஷ் ஆகியோர், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரியில் வி பத்து மற்றும் நரம்பியல் தொடர்பான சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு சிகிச் சை அளிப்பதில்லை. நோயாளிகளிடம் மருத்துவமனையில் நரம்பியல் டாக்டர் இல்லை என கூறி, வெளி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரியில், நரம்பியல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லை என காரணம் கூறி வெளியே அனுப்புவது சரி கிடையாது. மக்களின் உடல்நலனை காக்க, நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் விரைவாக நியமனம் செய்ய வேண்டும். இதற்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அரசு கூடுதல் தலைமை செயலர் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.