/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் பண்டிகைக்கு 1,300 போலீஸ் பாதுகாப்பு
/
பொங்கல் பண்டிகைக்கு 1,300 போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜன 14, 2025 07:14 AM
விழுப்புரம்: பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு;
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தும் வகையில் எஸ்.பி., சரவணன் தலைமையில் 1,300 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடம் தியேட்டர்கள், கடை வீதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்போடு இருக்கவும், வாகன ஓட்டிகள் விபத்தில்லாத பொங்கலை கொண்டாடும் விதமாக போக்குவரத்து விதிகளை பின்பற்றிட வேண்டும்.
பொது இடங்களில் யாரும் மது அருந்தக்கூடாது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிவேக பயணம், சாலையில் சாகசம் செய்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலை தவிர்க்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
பொதுமக்கள், பொங்கல் பண்டிகையையொட்டி, ஆறு, குளம், கடல் ஆகிய நீர் நிலைகளில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். சட்டம், ஒழுங்கு சீர்குலைக்கும் விதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
மேலும், தங்கள் பகுதிகளில் ஏற்படும், சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்த தகவலை 94981 81229, 94981 00485 ஆகிய மொபைல் போன் எண்களில் தெரிவிக்கலாம்.