/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து வி.சி., ரயில் மறியல் போராட்டம் மாவட்டத்தில் 175 பேர் கைது
/
மத்திய அமைச்சரை கண்டித்து வி.சி., ரயில் மறியல் போராட்டம் மாவட்டத்தில் 175 பேர் கைது
மத்திய அமைச்சரை கண்டித்து வி.சி., ரயில் மறியல் போராட்டம் மாவட்டத்தில் 175 பேர் கைது
மத்திய அமைச்சரை கண்டித்து வி.சி., ரயில் மறியல் போராட்டம் மாவட்டத்தில் 175 பேர் கைது
ADDED : டிச 20, 2024 05:05 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வி.சி., கட்சி சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
லோக்சபாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை விமர்சித்து பேசியதை கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும் நேற்று விக்கிரவாண்டி ஒன்றிய வி.சி., கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன் தலைமை யில் நேற்று மதியம் 12:45 மணிக்கு தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வந்த பயணிகள் ரயில் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., நந்தகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
கண்டமங்கலம்
விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட வி.சி., சார்பில் சின்னபாபு சமுத்திரத்திரம், ரயில் நிலையத்தில் புதுச்சேரியில் இருந்து காலை 8:37 மணிக்கு விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.சி., தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்
திண்டிவனத்தில் விழுப்புரம் மைய மாவட்ட செயலாளர் திலிபன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் போலீஸ் தடையை மீறி, நேற்று காலை 11:40 மணியளவில் சென்னையிலிருந்து திண்டிவனம் ரயில் நிலையம் வந்த குருவாயூர் விரைவு ரயில் முன் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் 75 பேரை டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மறியலால் ரயில் 5 நிமிடம் தாதமாக புறப்பட்டு சென்றது.