UPDATED : நவ 04, 2026 12:20 PM
ADDED : நவ 04, 2026 12:18 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: தம்பதியை தாக்கிய, 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த பரசுரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை, 35; இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ராம்பாக்கத்தை சேர்ந்த சூர்யா ஆகியோருடன் கடந்த 31ம் தேதி மது குடித்துள்ளார். அப்போது, சதீஷ்குமார் மொபைல் போன் காணாமல் போனதால், பாண்டிதுரை தான் எடுத்திருக்கலாம் எனக்கேட்டு, தகராறு ஏற்பட்டது. இதில், சதீஷ்குமார், சூர்யா ஆகியோர் சேர்ந்து பாண்டிதுரையை திட்டி தாக்கினர். இதனை தடுத்த பாண்டிதுரை மனைவி சுபஸ்ரீ, 30; என்பவரையும் திட்டி தாக்கினர்.
வளவனுார் போலீசார் சதீஷ்குமார், சூர்யா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
