தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்


UPDATED : நவ 02, 2026 08:19 PM

ADDED : நவ 02, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 08:19 PM ADDED : நவ 02, 2026 08:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: கிளியனுார் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை, பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷித், 26; இவர் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ரேவதி, 25; என்பவருடன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி மாருதி சுசூகி சியாஸ் காரில் சென்று கொண்டிருந்தார். காரை ரோஷித் ஓட்டினார்.

திண்டிவனம் – புதுச்சேரி பைபாஸ் சாலையில் அருவாப்பாக்கம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் வலதுபுறத்தில் இருந்த சென்டர் மீடியனில் மோதி, இடதுபுறமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், இருவரும் காயமடைந்தனர்.

கிளியனுார் போலீசார் நேரில் சென்று, இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us