/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
ADDED : செப் 25, 2024 03:40 AM
வானுார் : வானுார் அடுத்த குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
வானுார் அருகே கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வானுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி மோகன் ஆகியோர் அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வானுார் மெயின் ரோட்டில் காந்தி வீதியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி கண்ணகி, 52; மற்றும் ஆகாசம்பட்டில் விஜயசங்கர், 55; ஆகியோரது பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
மேலும் ஒரு வழக்கு
பட்டானுார், வசந்தபுரத்தில் ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஒரு கடையில் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடை உரிமயைாளரான வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வேலன், 27; என்பவரை கைது செய்து, 239 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.