sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விழுப்புரத்தில் சாலை மறியல் 330 மாற்றுத்திறனாளிகள் கைது

/

 விழுப்புரத்தில் சாலை மறியல் 330 மாற்றுத்திறனாளிகள் கைது

 விழுப்புரத்தில் சாலை மறியல் 330 மாற்றுத்திறனாளிகள் கைது

 விழுப்புரத்தில் சாலை மறியல் 330 மாற்றுத்திறனாளிகள் கைது


ADDED : பிப் 12, 2026 04:13 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 330 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காலை 11:00 மணிக்கு இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில், மாதாந்திர உதவித்தொகையை 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மேற்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட 330 மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us