/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபானம், சாராயம் கடத்தல் விக்கிரவாண்டியில் 4 பேர் கைது
/
மதுபானம், சாராயம் கடத்தல் விக்கிரவாண்டியில் 4 பேர் கைது
மதுபானம், சாராயம் கடத்தல் விக்கிரவாண்டியில் 4 பேர் கைது
மதுபானம், சாராயம் கடத்தல் விக்கிரவாண்டியில் 4 பேர் கைது
ADDED : ஜூன் 07, 2025 10:24 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மதுபானம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையிலான போலீசார் முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்ரோடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருக்கனுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், விருதாச்சலம் அருகே உள்ள மங்களம்பேட்டையை சேர்ந்த தினேஷ், 23; மணிமாறன், 21; என தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 78 மது பாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தொரவி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது திருக்கனுாரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த பைக்கை சோதனை செய்தபோது, 40 பாக்கெட் சாராயம் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. விக்கிரவாண்டி அடுத்த ஆசூரை சேர்ந்த குமரேசன், 27; அசோத்தமன், 27; ஆகியோரை கைது செய்து, சாராயம், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.