/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் 4 மையத்தில் நீட் தேர்வு 4,056 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
விழுப்புரத்தில் 4 மையத்தில் நீட் தேர்வு 4,056 மாணவ, மாணவியர் பங்கேற்பு
விழுப்புரத்தில் 4 மையத்தில் நீட் தேர்வு 4,056 மாணவ, மாணவியர் பங்கேற்பு
விழுப்புரத்தில் 4 மையத்தில் நீட் தேர்வு 4,056 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : மே 05, 2025 04:47 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 4 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 4,056 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, காகுப்பம் அரசு பொறியியல் கல்லுாரி, அண்ணா அரசு கலை கல்லுாரி, எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 4 மையங்களில் நடந்தது.
இதில், 1,300 மாணவர்கள், 2,877 மாணவிகள் என மொத்தம் 4,177 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேற்று 4,056 பேர் தேர்வெழுதினர். 121 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
காலை 11:30 மணி முதல் மாணவ, மாணவியர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையம் வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பின் ஹால்டிக்கெட், ஆதார், இரு போட்டோ மற்றும் ஒரு வாட்டர் பாட்டிலுடன் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்பட்டது.
மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையங்களின் கேட் மூடப்பட்டது. 2:00 மணிக்கு துவங்கிய நீட் தேர்வு மாலை 5:20 மணி வரை நடந்தது.
மாணவர்களோடு வந்த பெற்றோர்கள் வெயில் தாக்கத்தில் அவதிப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், தேர்வு மையம் அருகில் அமர்வதிற்கு தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.