ADDED : அக் 03, 2025 11:20 PM
விழுப்புரம் : பைக்கில் அதிவேமாக சென்ற 5 பேரை போலீசார் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் கொட்டப்பாக்கத்துவேலி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த முத்து, 25; என்பவர், பைக்கில் விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாக சென்றது தெரியவந்தது.
இதேபோன்று, கலைஞர் அறிவாலயம் முன் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் புதிய காலனியை சேர்ந்த பவுல், 20; என்பவர் பைக்கில் வேகமாக சென்றார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, முத்து, பவுலை கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரில் பைக்கில் வேகமாக சென்ற ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த தமிழ்செல்வன், 29; என்பவரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் காந்தி சிலை அருகில் பைக்கில் வேகமாக சென்ற கோலியனுாரை சேர்ந்த புஷ்பராஜ், 28; என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கோலியனுார் கூட்ரோட்டில் வேகமாக சென்ற அனிச்சம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார், 32; என்பவரை வளவனுார் போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரின் பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.