sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தழுதாளி - தொள்ளாமூர் சந்திப்பு வரை 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை

/

தழுதாளி - தொள்ளாமூர் சந்திப்பு வரை 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை

தழுதாளி - தொள்ளாமூர் சந்திப்பு வரை 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை

தழுதாளி - தொள்ளாமூர் சந்திப்பு வரை 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை


ADDED : நவ 18, 2024 11:02 PM

Google News

ADDED : நவ 18, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தழுதாளியில் இருந்து தொள்ளாமூர் வரை 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையில் இருந்து மயிலம் வழியாக தழுதாளி வரை செல்லும் புதுச்சேரி சாலை இருவழிச்சாலையாக இருந்தது. இந்த சாலை வழியாக புதுச்சேரியில் இருந்து மயிலம், செஞ்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இது மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், திண்டிவனம் வழியாகவும், வெள்ளிமேடுபேட்டை, தீவனுார், கூட்டேரிப்பட்டு, மயிலம் வழியாகவும் புதுச்சேரிக்கு அதிகளவில் வந்து செல்கின்றன.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குறுகியதாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததோடு, விபத்துகளும் நடந்தது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு சாலை வசதியை மேம்படுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்டப்பணிகள் 16 கோடி ரூபாய் செலவில் துவங்கியது. இப்பணிகள் இறுக்கட்டத்தில் உள்ளது.

வெள்ளிமேடுபேட்டையில் இருந்து தழுதாளி வரை நான்கு வழிச்சாலையாக பணி நிறைவு பெற்றாலும், அங்கிருந்து தொடர்ச்சியாக புதுச்சேரி மார்க்கமாக உள்ள பெரும்பாக்கம், வானுார், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வரையுள்ள 17 கி.மீ., துாரத்திற்கு இரு வழிச்சாலையாகவே உள்ளது.

வெள்ளிமேடுபேட்டையில் இருந்து தழுதாளி வரை நான்கு வழிச்சாலை ஏற்படுத்தியது போன்று, மீதமுள்ள 17 கி.மீ., துாரத்திற்கும் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதனையொட்டி, அடுத்த கட்டமாக தழுதாளியில் இருந்து தொள்ளாமூர் வரை உள்ள 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது என வானுார் வட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

இதற்கு அடுத்த கட்டமாக அடுத்த ஆண்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வரை நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us