/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு கூட்டத்தில் 637 மனுக்கள் குவிந்தது
/
குறைகேட்பு கூட்டத்தில் 637 மனுக்கள் குவிந்தது
ADDED : ஏப் 29, 2025 04:39 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முதியோர் உதவிதொகை, வீட்டுமனை பட்டா கோருதல், பட்டா மாறுதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 637 மனுக்கள் பெறப்பட்டது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 'முதல்வர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்' சார்பில், 9,42,272 ரூபாய் மதிப்பில் சுபக்கண்ணன், ராஜாமணி, அய்யனார் ஆகியோருக்கு, சுற்றுலா வாகனம், சுமை வாகனங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், தனித்துணை ஆட்சியர் முகுந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவக்கொழுந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.