/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 8 பேர் படுகாயம்
/
ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 8 பேர் படுகாயம்
ADDED : நவ 25, 2024 06:19 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் டாக்டர், ஆசிரியர் உட்டட 8 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை் சேர்ந்தவர் முகமது நிசார், 42; ேஷர் ஆட்டோ டிரைவர். இவர், நேற்று மாலை 3:45 மணியளவில், சாரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, திண்டிவனம் நோக்கி வந்தார்.
திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாஞ்சாலம் அட்டை கம்பெனி அருகே வந்தபோது, பின்னால் வந்த ஸ்கார்பியோ கார், மோதியது. அப்போது, முன்னால் சென்ற ஆக்டிவா பைக் மீது ஷேர் ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த அச்சரப்பாக்கத்தை சேர்ந்த முனுசாமி மகன் நியூரோ டாக்டர் இளையராஜா, 42; திண்டிவனம் மான்ட்போர்ட் பள்ளி ஆசிரியர் பாலா, 45; ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இதேபோல் ேஷர் ஆட்டோ டிரைவர் முகமது நிசார், ஆட்டோவில் பயணித்த கொடியம் கிராமம் ஜக்குபாய், 65; சாரம் சேகர், 61; ஒலக்கூர் வேலு, 31; கீழ்ஆதனுார் சத்யா, 15; செல்வி, 35; ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த 8 பேரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஜக்குபாய், டாக்டர் இளையராஜா, ஆசிரியர் பாலா ஆகியோர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக ஸ்கார்பியே கார் ஓட்டி வந்த சென்னை, தி.நகரைச் சேர்ந்த மூர்த்தி, 49; என்பவர் மீது ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.