/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 95.09 சதவீதம் தேர்ச்சி: 110 அரசு பள்ளிகள் உட்பட 192 பள்ளிகள் சென்டம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 95.09 சதவீதம் தேர்ச்சி: 110 அரசு பள்ளிகள் உட்பட 192 பள்ளிகள் சென்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 95.09 சதவீதம் தேர்ச்சி: 110 அரசு பள்ளிகள் உட்பட 192 பள்ளிகள் சென்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 95.09 சதவீதம் தேர்ச்சி: 110 அரசு பள்ளிகள் உட்பட 192 பள்ளிகள் சென்டம்
ADDED : மே 16, 2025 11:12 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 95.09 சதவீதமும், பிளஸ் 1 தேர்வில் 91.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 241 அரசு பள்ளிகள் உட்பட 362 பள்ளிகளில் பயின்ற 12,104 மாணவர்கள், 11,612 மாணவிகள் என மொத்தம் 23,716 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில், 11,394 மாணவர்கள், 11,158 மாணவிகள் என மொத்தம் 22,552 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 94.13. மாணவிகள் 96.09. மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 95.09. இது கடந்தாண்டைவிட 0.98 சதவீதம் கூடுதலாகும். அரசு பள்ளிகள் 94.15 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10ம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 110 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 192 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன்.
பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் 121 அரசு பள்ளிகள் உட்பட 194 பள்ளிகளில் பயின்ற, 11,120 மாணவர்களில், 9,928 பேரும், 11,025 மாணவிகளில் 10,353 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 89.28. மாணவிகள் 93.90. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 91.58 ஆகும். இது கடந்தாண்டைவிட 0.47 சதவீதம் கூடுதலாகும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.34 பெற்று, மாநில அளவில் 15வது இடத்தை பிடித்துள்ளது. பிளஸ் 1 தேர்வில், 22 அரசு பள்ளிகள் உட்பட் மொத்தம் 62 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்வு முடிவுகளை வெளியிட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் கூறியதாவது;
மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வி துறை இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கி நடைமுறை செய்தததால், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2 கல்வி ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி விகிதம் உயர மாணவர்களின் கடின உழைப்பும், பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பும் முக்கிய காரணம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி பெற முழு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பேட்டியின்போது, சி.இ.ஓ., அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகவேல், சேகர், சிவசுப்பிரமணி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார் உடனிருந்தனர்.