/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு பதிவு
/
சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 27, 2024 05:52 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே தனியார் நிறுவன ஊழியரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் அடுத்த மோட்சகுளம் காலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் பிரதீப்,27; இவர், சென்னை, சூளைமேடு பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
பிரதீப் நேற்று முன்தினம் அவர் தங்கிய இடத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த இவரின் குடும்பத்தார், உறவினர்கள் மோட்சகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
இது தொடர்பாக மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது நேற்று வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். இதனிடையே அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

