/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் மத்திய குழு ஆய்வு
/
திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் மத்திய குழு ஆய்வு
திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் மத்திய குழு ஆய்வு
திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் மத்திய குழு ஆய்வு
ADDED : மார் 05, 2024 05:48 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில், மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
சுற்றுச்சூழல் மற்றும் நிலையான மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற டில்லியைச் சேர்ந்த எரிசக்தி வளங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் அமித்குமார் தாகூர், ராஷ்மி முரளி, மினி கோவிந்த் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று விழுப்புரம் வருகை தந்தனர்.இவர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், திறன் மேம்பாடு, தொழில்திறன் பயிற்சி அளித்து வரும் சேவை நிறுவன அமைப்புகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் சாலாமேட்டில் ரிவார்ட் சொசைட்டி வளாகத்தில் ஆய்வு நடத்தினர்.
அப்போது, தொழில் முனைவோர்களுக்கு முறையான திறன் பயிற்சி, திறன் மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை செயல்படுத்துதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, திறன் பயிற்சி பெற்ற மகளிர் மற்றும் பயிற்சி பெறுவோரிடம் குழுவினர் கலந்துரையாடினர்.

