/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் தொடர் விபத்து பொதுமக்கள் சாலை மறியல்; கிரிவல பக்தர்கள் அவதி
/
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் தொடர் விபத்து பொதுமக்கள் சாலை மறியல்; கிரிவல பக்தர்கள் அவதி
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் தொடர் விபத்து பொதுமக்கள் சாலை மறியல்; கிரிவல பக்தர்கள் அவதி
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் தொடர் விபத்து பொதுமக்கள் சாலை மறியல்; கிரிவல பக்தர்கள் அவதி
ADDED : ஆக 09, 2025 11:19 PM

செஞ்சி: செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் தொடர் விபத்தால் மக்கள் உயிர் இழந்து வருவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் கிரிவலம் வந்த பக்தர்கள் ஒரு மணி நேரம் அவதிப்பட்டனர்.
அதிக வாகனங்கள் செல்லும் திண்டிவனம், திருவண்ணாமலை சாலை தற்போது இருவழி சாலையாக உள்ளது. போக்குவரத்து அதிகரித்திருப்பதால் தினமும் விபத்து நடந்து வருகிறது.
கடந்த, 7ம் தேதி இரவு, ரெட்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு, 8:00 மணிக்கு 'பைக்' மோதி, 19 வயது கல்லூரி மாணவன் தலை சிதறி இறந்தார்.
இந்த இடத்தில் விளக்கு வசதி இல்லாததால் தொடர் விபத்து நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் விபத்தில், 3 பேர் இறந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 10:15 மணிக்கு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று பவுர்ணமி என்பதால் திருவண்ணாமலைக்கு சென்ற வாகனங்ளும், திரும்பி வந்த வாகனங்களும் இருபக்கமும் 2 கி.மீ., துாரத்திற்கு நின்றன.
மேல்மலையனுார் இன்ஸ்பெக்டர் வனிதா சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசினார். அவரது சாமாதானத்தை பொதுமக்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஜானகிராமனை, போலீசார் வரவழைத்தனர். அவர், ஒரு மாதத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து 11:25 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கிரிவலம் வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
எம்.பி., உறுதி இது குறித்த தகவல் அறிந்த ஆரணி தொகுதி எம்.பி., தரணிவேந்தன், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில், 2 நாட்களில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தருவதாக தெரிவித்துள்ளார்.