/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு! வேளாண்மை துறை எச்சரிக்கை
/
உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு! வேளாண்மை துறை எச்சரிக்கை
உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு! வேளாண்மை துறை எச்சரிக்கை
உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு! வேளாண்மை துறை எச்சரிக்கை
ADDED : அக் 16, 2024 10:04 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட உர விற்பனை நிலையங்களில், அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா 7198 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 2467 மெ.டன், பொட்டாஷ் 1407 மெ.டன், காம்ப்ளக்ஸ் 6542 மெ.டன், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 1455 மெ. டன் உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். உரக் கடத்தல், உரப்பதுக்கல், போலி உரங்கள் விற்பனை செய்தல், வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கு உபயோகித்தல் கூடாது.
விற்பனை முனையக் கருவி வாயிலாக உரங்கள் விற்பனை மேற்கொள்வதை உறுதி செய்தல், உரங்களின் விற்பனை விலையினை தகவல்பலகையில் எழுதி விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருத்தல், உரங்களின் இருப்பு பதிவேடு பராமரித்தல் கடைப்பிடிக்க வேண்டும்.
யூரியாவுடன் கூடுதல் இணைப்பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985- க்கு புறம்பான செயல்களை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும், வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ஐ மீறும் உர விற்பனை நிலையங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுபட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை விற்பனை செய்யப்பட வேண்டும் எச்சரிக்கை விடுத்தனர்.