/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரும்பை - கோட்டக்கரை சாலை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
/
இரும்பை - கோட்டக்கரை சாலை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
இரும்பை - கோட்டக்கரை சாலை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
இரும்பை - கோட்டக்கரை சாலை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 26, 2025 04:01 AM
வானுார் : இரும்பை - கோட்டக்கரை செல்லும் சாலையை அகலப்படுத்தாததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து இரும்பை கிராமம் வழியாக கோட்டக்கரை, ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், அன்னை நகர், ராயப் புதுப்பாக்கம், ராயப்பேட்டை, ஆப்பிரம்பட்டு கிராமங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. சென்னை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பைபாஸ் வழியாக ஆரோவில் வரும் வாகனங்களும் இச்சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலையில் இரும்பை-ஆலங்குப்பம் சாலை அகலம் மிக குறுகியதாக உள்ளது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத சூழல் உள்ளது.
இரவு நேரங்களில், சாலையோர பள்ளத்தில் விழுந்தெழுந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. 5 கி.மீ., துாரம் கொண்ட இந்த சாலை மாநில நெஞ்சாலைத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

