/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்நடைகள் பாதுகாப்பு சட்டத்தை மீறினால் நடவடிக்கை : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

ADDED : டிச 29, 2024 06:23 AM
விழுப்புரம்: கால்நடைகள் பாதுகாப்பு சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
சென்னை ஐகோர்ட் உத்தரவு மற்றும், தமிழ்நாடு கால்நடை பாதுகாப்புச் சட்டம், தமிழ்நாடு போக்குவரத்து விதிகளின் படி, கால்நடைகளை பராமரித்திட வேண்டும். வாகனங்களில் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் போது, போதிய இடவசதி, உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். கால்நடைகள் அனுமதியின்றி வாகனங்களில் கொண்டு செல்லக் கூடாது.
வாகனங்களில் கால்நடைகளுக்கு சுவாசிக்க போதுமான இடவசதியின்றி, நெருக்கமாக ஏற்றி செல்வது சட்டப்படி குற்றம். இதனை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்படும்.
வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கால்நடைகள் ஏற்றிச் செல்லும்பட்சத்தில், கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து அபராத தொகை வசூலிக்கப்படும்.
இறைச்சி கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படுவதற்கு, கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவரின் பரிசோதனை சான்று பெறப்பட வேண்டும். கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தனி நபர்கள், தகுதிவாய்ந்த அதிகார அமைப்பினரிடம் அனுமதி சான்று பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.