/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதித்யா விவேகானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
/
ஆதித்யா விவேகானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
ஆதித்யா விவேகானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
ஆதித்யா விவேகானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
ADDED : மே 10, 2025 12:48 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஆதித்யா விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி நித்யஸ்ரீ 587, மாணவர் பரணிதரன் 568, மாணவி ரேணுகா தேவி 564 மதிப்பெண் பெற்று முறையே பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
கணிதத்தில் பரணிதரன், கணினி அறிவியலில் ரேணுகா தேவி, நித்யஸ்ரீ, ஜெயஸ்ரீ கணினி பயன்பாட்டில் ரோகித் மற்றும் தனுஜா, பொருளியலில் ஷ்யாம் ஆகியோர் 100க்கு100 எடுத்துள்ளனர்.
மேலும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் 5 பேர், 500க்கு மேல் 19 பேர், 450க்கு மேல் 34 பேர் பெற்றுள்ளனர். 98 சதவீதம் பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் அசோக் ஆனந்தன், அறக்கட்டளை உறுப்பினர்கள் அனுதா பூனமல்லி, ஆர்த்தி, பள்ளி முதல்வர் கிருஷ்ணராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இப்பள்ளியில் இந்தாண்டு முதல் ஆலன் பயிற்றுநர்கள் மூலம் மாணவர்களுக்கும் வார இறுதி நாட்களில் நீட் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இதேபோல் மறுமுயற்சி தேர்வுகளுக்கும் ஆலன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணத்தில் நுாறு சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிராமப்புற பகுதியில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களை பள்ளி நிறுவனர் ஆனந்தன் பாராட்டினார்.