/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடிக்கு நிர்வாகிகள் வாழ்த்து
/
பொன்முடிக்கு நிர்வாகிகள் வாழ்த்து
ADDED : ஆக 19, 2025 11:50 PM

கண்டாச்சிபுரம் : முகையூர் மற்றும் மணம்பூண்டி ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் 75 வது பிறந்த நாள் விழா நேற்று காலை விழுப்புரம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் முகையூர் (வடக்கு)ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்,மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரபு,முகையூர் (தெற்கு) ஒன்றிய செயலாளர் லுாயிஸ் ஆகியோர் பொன்முடிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் தி.மு.க மாநில,மாவட்ட நிர்வாகிகள்,முகையூர் மற்றும் மணம்பூண்டி ஒன்றிய மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.