ADDED : ஜன 30, 2024 07:44 AM

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுாரில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். திருவெண்ணெய்நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், பழனிசாமி, இளங்கோவன், தனபால் ராஜ், நகர செயலாளர் சுப்பு முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் துவக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் சிவசங்கரி சிறப்புரையாற்றினார். இலக்கிய அணி செயலாளர் துரைராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் மஞ்சுளா இயேசு பாதம், மணி, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் பவுனு நாராயணன், ஜெ.பேரவை துணைச் செயலாளர் சுபாஷ், பாசறை செயலாளர் நித்தியானந்தன் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலு பாஸ்கர் ஒன்றிய அவைத் தலைவர் பாபு, வேலாயுதம், வார்டு செயலாளர்கள் ஸ்ரீதர், வேலு.
எரளூர் ஊராட்சி தலைவர் வெங்கடாஜலபதி, வழக்கறிஞர்கள் பிரேம்குமார், அன்பரசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.