/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு
/
நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : அக் 18, 2024 11:29 PM
வானுார்: வானுார் அடுத்த தைலாபுரத்தில், நேரடி நெல் விதைப்பு வயலை, வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.
தைலாபுரம், கொங்சுமங்கலம், எடச்சேரி பகுதிகளில் மானாவாரி புஞ்சை நிலங்களில் ஆண்டிற்கு ஒரு போகம் புழுதி கால் உழவு செய்து நெல் விதைகளை விதைப்பு செய்து வருகின்றனர். இவ்வாறு செய்யப்பட்ட தைலாபுரம் கிராமத்தில் உள்ள 20 முதல் 25 நாட்கள் ஆன நெற்பயிர்களை, வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது, சிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோவும், நெல் நுண்ணுாட்ட உரம் ஏக்கருக்கு 5 கிலோவும் இட வேண்டும் என விவசாயிகளிடம் அறிவுறுத்தினார்.
உடனடியாக இடுபொருட்களை மானிய விலையில் வாங்கி வயலில் மணலுடன் கலந்து இடவும் பரிந்துரை செய்தார்.
ஆய்வின் போது துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் தங்கம், பஞ்சநாதன், ஜெயலட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்திரசேகர் உடனிருந்தனர்.

