/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
/
அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
ADDED : செப் 30, 2025 06:38 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தமிழக அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் கோண்டூர் ஊராட்சியில் நடந்தது.
கூட்டத்திற்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் கவுரி பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நித்யகல்யாணி ராமமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் கல்யாணிவேலு, ராஜேஸ்வரி சந்திரசேகர், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க., தலைமைக் கழக பேச்சாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட நிர்வாகி மணிமாறன் துவக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கர் (எ) சண்முகம், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வேல்முருகன், ஊராட்சி தலைவர்கள் ஜெயராணி மாரிமுத்து, நாயகம் நாகராஜன், ஒன்றிய வர்த்தக அணி இணைச் செயலாளர் முனியசாமி, கிளைச் செயலாளர்கள் செல்வம், சுந்தர்ராஜ், விஜயகுமார், கெங்கமுத்து, வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.