ADDED : பிப் 07, 2024 04:13 AM

மயிலம் : மயிலம் சிவப்பிரகாசம் மேல்நிலைப் பள்ளியில் 53 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சிவப்பிரகாசம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்தில், கடந்த 1970, 71, 72ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர் சங்க பிரதிநிதி குப்புசாமி, கருணாநிதி தலைமை தாங்கினர். தர்மசிவன், புருஷோத்தமன், தனுசு, ஜெயமணி முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் வரவேற்றார்.
முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தனசேகர், ஜெயக்குமார், மோகன் குமார், வேலாயுதம், சந்தானம் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் ஜோதி, கவுரி, ஜனார்த்தனன் ஆகியோரை கவுரவித்து நினைவுப் பரிசு வழங்கினர்.
தங்கள் குடும்பத்துடன் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

