/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.ஐ.ஜி., அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்
/
டி.ஐ.ஜி., அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்
ADDED : நவ 14, 2024 05:53 AM

விழுப்புரம்: விழுப்புரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் வயதான தம்பதி மனு அளித்தனர்.
திண்டிவனம் தாலுகா, கொடியம் கிராமத்தைச் சேர்ந்த காசி 65; இவர் தனது மனைவி பத்மாயுடன்,60; விழுப்புரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
கொடியம் கிராமத்தில் உள்ள எங்களது வீட்டிற்கு, கடந்த மாதம் 23 ம் தேதி, சென்னையைச் சேர்ந்த பத்மாவின் உறவினர் கோவிந்தம்மாள், அவரது மகள் வந்து தகராறு செய்தனர்.
மேலும், வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி, எங்கள் இருவரையும் தாக்கி, மிரட்டிவிட்டுச் சென்றனர்.இது குறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

