/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னம்புத்துார் - நரசிம்மர் ஓடையில் ரூ.5.51 கோடியில் உயர்மட்ட பாலம்

ADDED : ஏப் 06, 2025 05:39 AM

திண்டிவனம் : அன்னம்புத்தூர் நரசிம்மர் ஓடையில் 5.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
திண்டிவனம் அடுத்த அன்னம்புத்துாரிலிருந்து ஓமந்துார் செல்லும் வழியில் நரசிம்மர் ஓடையில், நபார்டு திட்டத்தின் கீழ் 5.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் பழனி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் அமுதா, ஊராட்சி தலைவர் புனிதவள்ளி ரவி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜைக்கு தலைமை தாங்கி, பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் ராஜா, உதவி செயற் பொறியாளர் அன்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவனேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.