ADDED : மார் 24, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனப்பாக்கம் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு ஊராட்சி தலைவர் பூவராகவன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மணியரசி, முன்னாள் தலைவர் வள்ளி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எழிலரசி வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
'தினமலர்' பட்டம் இதழ் வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் ராஜேந்திரன், சண்முகம், ரேவதி, விஜயலட்சுமி, சுகந்தி, பர்வீன் உட்பட பலர் பங்கேற்றனர். இல்லம் தேடிக் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் நன்றி கூறினார்.