/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா
/
ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 07, 2024 04:16 AM
செஞ்சி : களையூர், நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியின் 12வது ஆண்டு விழா நடந்தது.
கல்விக் குழுமத் தலைவர் பாபு தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். செயலாளர் அய்யப்பன், பொருளாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் சிறப்புரையாற்றினார்.
அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜாராம், அங்கவை பாபு, அரவிந்தன், வெங்கட சுப்ரமணியன், பள்ளி முதல்வர் முரளி வாழ்த்திப் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
சிறந்த மாணவர்களுக்கும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

